LATEST NEWS
மரணத்திற்குப் பின்னும் சிதையாத உடல்…! 125 நாட்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடலின் பின்னணி என்ன..?!
ஈரானின் அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அயதுல்லா அலி கமேனியின் மரணம் கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் போர்ச்சூழல் உச்சத்தில் இருந்ததாலும், ஈரானில் நிலவிய கடுமையான பாதுகாப்புப் பதற்றம் காரணமாகவும் அவரது உடலுக்கு உடனடியாக இறுதிச் சடங்குகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, நீண்ட 125 நாட்களுக்குப் பிறகு தற்போது அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்களைக் கடந்தும் அவரது உடல் எப்படி சிதையாமல் இருக்கிறது என்ற கேள்வி உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.
டெஹ்ரானின் அதீத பாதுகாப்பு வளையத்திற்குள், நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய எம்பாமிங் முறைகளை இணைத்து அவரது உடல் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. உடலின் இயற்கை திரவங்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, திசுக்கள் அழுகாமல் இருக்க ஃபார்மால்டிஹைட், கிளிசரின், ஆல்கஹால் போன்ற வேதிப்பொருட்களின் கலவை தமனிகள் வழியாகச் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கடுமையான பாதுகாப்புடன் கூடிய நிலத்தடி மருத்துவ வசதியில், மிகக் குறைந்த வெப்பநிலை மற்றும் காற்று புகாத சிறப்புப் பெட்டகத்தில் உடல் வைக்கப்பட்டு, ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வாரந்தோறும் நிபுணர்கள் கண்காணிப்பில், தோலின் தன்மையைப் பாதுகாக்க பிரத்யேக மெழுகு மற்றும் சிலிகான் பராமரிப்பு முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உலக வரலாற்றில் தலைவர்களின் உடல்களை இவ்வாறு நீண்ட காலம் பாதுகாப்பது இது முதல் முறையல்ல. சோவியத் தலைவர் லெனின், வியட்நாமின் ஹோ சி மின் மற்றும் வடகொரியாவின் கிம் இல் சுங் போன்றோரின் உடல்களும் இதேபோன்று எம்பாமிங் செய்யப்பட்டு நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஈரானின் வரலாற்றுப் பின்னணியிலும் முன்னாள் மன்னர் ரிசா ஷா பஹ்லவியின் உடல் இதேபோன்ற முறையில் பாதுகாக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
