LATEST NEWS
அதிமுக MLA-க்கள் ராஜினாமா…! EPS-க்கு பேரவை செயலாளர் அதிரடி அழைப்பு..!!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பான விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் அழைத்துள்ளார். முன்னதாக, ஏற்கெனவே ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோரிடம் இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கூடுதல் விவரங்களைப் பெற வேண்டியுள்ளதால், ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட அந்த 4 உறுப்பினர்களுடன் சேர்த்து எடப்பாடி பழனிசாமியையும் நேரில் ஆஜராகுமாறு பேரவை செயலாளர் அழைப்பாணை அனுப்பியுள்ளார். அதன்படி, வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விசாரணையில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
