LATEST NEWS
ஜன நாயகன் வந்திருந்தால் 234-ல் தொகுதியிலும் TVK சிங்கிள் சிங்கம்…! அமைச்சர் KAS..!!
அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வெளியாகியிருந்தால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி பெற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் இதுவே கடைசிப் படம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும், திட்டமிட்டே இப்படத்தின் வெளியீட்டை முடக்கினார்கள் என்றும், அதற்கு யார் பின்னணியில் காரணமாக இருந்தார்கள் என்பது தமிழக நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தியேட்டர்களில் இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இப்படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருவதாகக் குறிப்பிட்டார். அதேவேளையில், இவ்வளவு சிறப்பான இத்திரைப்படம் முக்கியமான தேர்தலுக்கு முன்பாக தியேட்டர்களுக்கு வரவில்லையே என்ற ஏக்கம் மற்றும் கஷ்டம் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் அத்தனை பேரின் மனதிலும் நிச்சயம் இருக்கும் என்றும் தனது பேட்டியில் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
