LATEST NEWS
“GenZ-ன்னா என்னனு தெரியுமா..? ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் பண்ணாதீங்க…!” உதயநிதியை வெச்சு செஞ்ச அமைச்சர் நிர்மல்குமார்..!!!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், உதயநிதி ஸ்டாலின் தனது கோமாளித்தனமான செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று விமர்சித்தார். அவருக்கு ‘GenZ’ என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று கூறிய அவர், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரூ.200 கொடுத்து ‘GenZ DMK’ அமைப்பினரை அமர வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
திமுகவை வழிநடத்தும் தகுதி உதயநிதிக்கு இருக்கிறதா என்பதை அவர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுகவிற்குத் தலைமை தாங்குவதில் ‘கனிமொழியா அல்லது உதயநிதியா?’ என்று கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தத் தயாரா எனச் சவால் விடுத்தார். மேலும், ‘GenZ DMK’ எனச் சும்மா ஸ்டிக்கர் ஒட்டி அரசியல் செய்ய வேண்டாம் என்றும், சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வுப் போராட்டத்தில் புகுந்து திமுக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சாடினார்.
மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார் என்று அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்தார். இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை நேரில் சந்தித்துப் பேசுவதன் மூலமே தீர்வு காண முடியும் என்றும், முதல்வர் விஜய்யின் கர்நாடகப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்தார்.
