LATEST NEWS
“இவளாம் மனுஷியா..? பெத்த அப்பா வயசு இருக்கும்… முதிய காவலாளியை அடித்து, சட்டையைக் கிழித்த இளம்பெண்… போலீஸ் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!”
சென்னை மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட மோதலில் முதிய காவலாளியை இளம்பெண் ஒருவர் தாக்கி, சட்டையைக் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், காரில் படம் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் பார்க்கிங் பகுதியில் காரைச் சரியாக நிறுத்தும்படி காவலாளி ஸ்ரீதர் அறிவுறுத்தியபோது முதன்முதலாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது.
படம் முடிந்து அந்த குடும்பத்தினர் காரில் வெளியே வந்தபோது, மற்றொரு காட்சிக்கு வந்த காரை உள்ளே அனுமதிப்பதற்காக ஸ்ரீதர் இவர்களது காரைச் சற்று நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த காரில் இருந்த இளம்பெண் கீழே இறங்கி வந்து, வயதான காவலாளி ஸ்ரீதரின் சட்டையைப் பிடித்துக் கிழித்ததோடு, அவரது கன்னத்திலும் அறைந்துள்ளார். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றியிருந்த பொதுமக்கள், அப்பெண்ணைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது. இதனையடுத்து தாம்பரம் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட காவலாளி ஸ்ரீதரிடம் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், திரையரங்கின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்துத் தாக்குதலில் ஈடுபட்ட இளம்பெண் குறித்துப் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
