“தேர்தல் முடிந்து 5 மாசமாச்சு… ஆனா பணம் வரல..! இரவு-பகலா வேலை பார்த்த போலீசாருக்கு இப்படி ஒரு சோதனையா..? கடும் அதிருப்தியில் தமிழக காவல்துறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தேர்தல் முடிந்து 5 மாசமாச்சு… ஆனா பணம் வரல..! இரவு-பகலா வேலை பார்த்த போலீசாருக்கு இப்படி ஒரு சோதனையா..? கடும் அதிருப்தியில் தமிழக காவல்துறை..!!

Published

on

தேர்தல் காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம், ஊர்வலம், தலைவர்களின் பிரசார பயணங்கள் போன்ற நிகழ்வுகளுக்காகவும், வேட்பாளர்களின் மனுத்தாக்கல், வாக்குச்சாவடி பாதுகாப்பு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி போன்ற பல்வேறு பணிகளுக்காகவும் ஒவ்வொரு மாவட்ட போலீசாரும், அதிரடிப்படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்பட பல்வேறு படைப்பிரிவு போலீசாரும் தொலைதூர வெளி மாவட்டங்களுக்கு மாற்றுப்பணியாக அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு அனுப்பப்படும் போலீசாருக்கு உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக அவர்களின் பதவியைப் பொறுத்து நாளொன்றுக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை அரசால் தினசரி பயணப்படியாக வழங்கப்படும். சட்டமன்ற தேர்தலாக இருந்தால் மாநில அரசும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தால் மத்திய அரசும் இந்த நிதியை வழங்கும் என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் வரை கணக்கிடப்பட்டு இந்தத் தொகை மொத்தமாக ஒவ்வொரு காவலரின் கணக்கிலும் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்து மே மாதம் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட காலம் வரை, ஒவ்வொரு தொகுதியிலும் 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் கிரேடு 2 போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை இரவு பகலாகப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதற்காக ஒவ்வொரு போலீசாருக்கும் அவர்களின் பதவிக்கு தகுந்தாற்போல் சுமார் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை அரசு வழங்க வேண்டியுள்ளது. இருப்பினும், இத்தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு 53 நாட்களுக்கான பயணப்படி, தேர்தல் முடிந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வழங்கப்படவில்லை.

Advertisement

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பணியின்போது தேர்தல் முடிந்த 15 நாட்களிலேயே இத்தொகை போலீசாரின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது 5 மாதங்கள் கடந்தும் இன்னும் பயணப்படி வழங்கப்படாததால் காவல்துறையினர் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்த பயணப்படியை கிடைக்கச் செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in