LATEST NEWS
உங்க தங்கச்சிக்கு இப்படி நடந்தா ஏத்துக்குவீங்களா..? இளைஞரின் பேச்சால் தமிழா தமிழா அரங்கில் வெடித்த பரபரப்பு..!!!
பிரபல தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ என்ற ரியாலிட்டி விவாத நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு சுவாரஸ்யமான தலைப்பில் விவாதங்கள் நடத்தப்படும் நிலையில், இந்த வாரம் “உறவு முறை பையன் மற்றும் முறைப்பெண்” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பல முறைப்பையன்களும் முறைப்பெண்களும் கலந்து கொண்டு தங்களுடைய சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பலர், நீண்ட வருடங்களுக்குப் பிறகு தங்களது முறைப்பெண்களைப் பார்த்த தருணங்களை நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் விவரித்தனர். அதில் ஒரு இளைஞர், “Smooth-ஆன சூறாவளி வந்தால் எப்படியிருக்கும்?” என்று கேள்வி எழுப்பி அரங்கத்தையே சிரிக்க வைத்தார். முறை உறவுகளுக்குள் இருக்கும் பாசத்தையும் தயக்கங்களையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த உரையாடல்கள் அமைந்திருந்தன.
நிகழ்ச்சி மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வேளையில், ஒரு இளைஞர் தான் வேறொரு பெண்ணைக் காதலித்து வருவதாகவும், அதே நேரத்தில் தனது முறைப்பெண்ணையும் திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நடுவர், “நாளைக்கு உங்க தங்கச்சியை இந்த மாதிரி பண்ணினால் ஏத்துப்பீங்களா?” என்று அந்த இளைஞரைப் பார்த்து சட்டென கோபத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால் அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
