சிகரெட் பழக்கமே இல்லையா..? ஆனாலும் உங்களுக்கு இந்த பாதிப்பு வரும்..! பெங்களூரு அதிர்ச்சி பின்னணி..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிகரெட் பழக்கமே இல்லையா..? ஆனாலும் உங்களுக்கு இந்த பாதிப்பு வரும்..! பெங்களூரு அதிர்ச்சி பின்னணி..!!!

Published

on

ஐடி நகரமான பெங்களூருவில் காற்று மாசுபாடு மிக மோசமடைந்துள்ளது. அங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றானது, வாரத்திற்கு 2 சிகரெட்டுகளையும், ஒரு மாதத்திற்கு சுமார் 10 சிகரெட்டுகளையும் புகைப்பதற்குச் சமமாகும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, புகைப்பிடிக்கும் பழக்கமே இல்லாத ஒரு நபர் கூட சிகரெட் பிடிப்பவருக்கு நிகரான நுரையீரல் பாதிப்பைச் சந்திக்க நேரிடுகிறது.

உலகில் அதிக வாகன நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தில் உள்ளது. அங்கு தினமும் சராசரியாக 3,000 புதிய வாகனங்கள் 2,100 இருசக்கர வாகனங்கள், 900 கார்கள்/இதர வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. தற்போது பெங்களூருவில் உள்ள சொந்த வாகனங்கள் மற்றும் அண்டை மாநில வாகனங்களையும் சேர்த்து தினமும் சுமார் 1.55 கோடி வாகனங்கள் ஓடுவதால் காற்று மாசு மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது.

Advertisement

பெங்களூருவின் சில்க் போர்டு ஜங்ஷன், மெஜஸ்டிக், வைட்பீல்டு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பாதிப்பு உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது தரமான முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், காற்று மாசு அதிகமாக இருக்கும் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in