LATEST NEWS
சாரே..! இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் இவ்வளவு கூலா விஜய் படமா..? தியேட்டரில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசித்த செந்தில் பாலாஜி…? இணையத்தைக் கலக்கும் வைரல் இன்ஸ்டா ரீல்ஸ்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்து அண்மையில் வெளியான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை, செந்தில் பாலாஜி தியேட்டரில் அமர்ந்து ரசித்துப் பார்ப்பது போன்ற ஒரு குறுகிய ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பதிவிட்ட நபர், பின்னணியில் அப்படத்தின் பாடலை ஒலிக்கவிட்டு “இது என்ன படம் என்று சொல்லுங்கள்?” என நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளும், வழக்குகளும் அவருக்கு எதிராக நிலவி வரும் தற்போதைய இக்கட்டான சூழலில், அவர் எவ்வித கவலையுமின்றி மிகவும் கூலாக தியேட்டரில் படம் பார்ப்பதாக இந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை கமெண்ட் பக்கத்தில் வாரி இறைத்து வருகின்றனர். “இவ்வளவு பெரிய அரசியல் நெருக்கடிகளுக்கும், கோர்ட் விவகாரங்களுக்கும் மத்தியிலும் மனுஷன் இவ்வளவு கூலாக தியேட்டருக்கு வந்து விஜய் படம் பார்க்கிறாரே!” என வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். தவெக மற்றும் திமுக இடையே அரசியல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், தவெக தலைவர் விஜய்யின் படத்தை திமுகவின் முக்கியப் புள்ளியான செந்தில் பாலாஜி பார்ப்பது போன்ற இந்த வீடியோ அரசியல் வட்டாரத்திலும், சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
