“என்னை மொனாலிசா கூட ஒப்பிடாதீங்க..! நான் கன்வார் யாத்திரையோட வைரல் ஷேர்னி..!” தனக்கென தனி அடையாளம் கேட்டு முழங்கிய கன்வார் யாத்திரை பெண் மானசி தாக்கூர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை மொனாலிசா கூட ஒப்பிடாதீங்க..! நான் கன்வார் யாத்திரையோட வைரல் ஷேர்னி..!” தனக்கென தனி அடையாளம் கேட்டு முழங்கிய கன்வார் யாத்திரை பெண் மானசி தாக்கூர்..!!

Published

on

61 லிட்டர் கன்வாருடன் சுமார் 180 கிலோமீட்டர் தூரம் கடினமான கன்வார் யாத்திரையை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் மானசி தாக்கூர். இவருடைய தனித்துவமான பழுப்பு நிற கண்களும், இந்த ஆன்மீகப் பயணமும் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. முன்னதாக மகா கும்பமேளாவின் போது வைரலான மொனாலிசா என்ற பெண்ணுடன் மானசியின் தோற்றத்தை ஒப்பிட்டுச் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதுகுறித்து மானசி தாக்கூர் தனது கருத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மானசி, “என்னை மொனாலிசாவுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். நான் ஒரு சனாதனி மற்றும் மகாதேவனின் (சிவபெருமான்) தீவிர பக்தை” என்று கூறியுள்ளார். மேலும் மொனாலிசாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அவர், “மொனாலிசா ஒரு முஸ்லிம் நபரைத் திருமணம் செய்துகொண்டார், அதை நான் எதிர்க்கிறேன். நான் என்னுடைய இந்து மத நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் தான் பிற இணையப் பிரபலங்களுடன் ஒப்பிடப்படுவதை விட, தனது சிவபக்திக்காக மட்டுமே அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்த விரும்பும் மானசி, மக்கள் தன்னை “கன்வார் யாத்திரையின் வைரல் ஷேர்னி” என்று அழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் தோற்ற ஒற்றுமையால் மொனாலிசாவுடன் ஒப்பிடப்பட்டு வைரலான போதிலும், 180 கி.மீ நடைபயணம் மற்றும் 61 லிட்டர் கன்வாரை ஏந்திச் சென்ற தனது ஆன்மீக அர்ப்பணிப்பின் மூலமாகவே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற அவர் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in