“எம்.எல்.ஏ உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம்”.. ஆனா தூய்மைப் பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுக்குறீங்க..? முதலமைச்சர் விஜய்க்கு பாரதி சரமாரி கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எம்.எல்.ஏ உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம்”.. ஆனா தூய்மைப் பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுக்குறீங்க..? முதலமைச்சர் விஜய்க்கு பாரதி சரமாரி கேள்வி..!!

Published

on

சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு மாதம் 25,000 ரூபாய் ஊதியம் தேவைப்படும் என நினைக்கும் முதலமைச்சர் விஜய், இரவு பகலாக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 25,000 ரூபாயை வழங்க முடியாதா என்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி மிகக் கடுமையான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, தற்போதைய சூழலில் வழங்கப்படும் 19,000 ரூபாய் மாதச் சம்பளம் வாழ்வாதாரத்திற்கு எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டுள்ள இந்த காலகட்டத்தில், அடித்தட்டு உழைப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் மாதாந்திர சம்பளத்தை உடனடியாக உயர்த்தி வழங்க முதல்வர் விஜய் தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in