LATEST NEWS
“முதல்வரின் ‘அந்த’ விஷயத்திற்கு நோபல் பரிசே கொடுக்கலாம்..!” விஜய்யை வம்புக்கு இழுத்த EPS.. அரசியல் களத்தில் மாஸ் அட்டாக்..!!
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமரிசித்துள்ளார். எல். எண்டத்தூரில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்துப் பேசிய அவர், அதிமுகவின் உழைப்பால் வெற்றி பெற்று, பின்னர் பெட்டி வாங்கிக்கொண்டு குதிரை பேரத்தின் வழியாகக் கட்சி மாறிய ஒரு துரோகிக்குத் தவெக மீண்டும் சீட் கொடுத்துள்ளதாகச் சாடினார். “மக்களையும் நிர்வாகிகளையும் மதிக்காமல் கட்சி மாறிய ஒருவரைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு நேற்று விஜய் வீர வசனம் பேசியுள்ளார். இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை மற்றும் வெட்கக்கேடானது” என்று எடப்பாடி பழனிசாமி மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான பயிர்க்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை உயர்வு மற்றும் ரூ.2,500 உரிமைத்தொகை போன்ற எதையுமே நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டதாக இ.பி.எஸ் குற்றம்சாட்டினார். போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் நிகழ்ச்சியில் தவெக அமைச்சர்கள் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் இந்த அரசு, பொய் பேசுவதில் புதிய வரலாறு படைத்து வருவதாகக் கூறினார். தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்து, மக்களை ஏமாற்றி வரும் தவெக அரசு வெறும் ‘ரீல் மற்றும் ரீல்ஸ்’ அரசாங்கமாக மட்டுமே செயல்படுகிறது என்றும், “பொய் பேசுவதற்கு விஜய்க்கு நோபல் பரிசே கொடுக்கலாம்” என்றும் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார்.
