CRIME
உஷார்..! உங்க மொபைலுக்கு இந்த SMS வந்துச்சா..? தொட்டீங்கன்னா மொத்தமும் காலி… வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அவசர எச்சரிக்கை..!!
அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறி போலி குறுஞ்செய்தி அனுப்பி, தீங்கு விளைவிக்கும் செயலி மூலம் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடந்து வருகிறது.
அரசு தளம்போல் தோன்றும் குறுஞ்செய்தியில், அபராத விவரங்களுடன் போலி இ-சலான் இணையதளத்துக்கான இணைப்பும் அனுப்பப்படுகிறது. அந்த இணைப்பைத் திறந்தால், அதிகாரப்பூர்வ இ-சலான் தளம் போன்று தோன்றும் போலி இணையதளம் திறக்கிறது.
அதில் வாகனப் பதிவு எண்ணைச் சரிபார்க்க செயலியைப் பதிவிறக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. செயலியைப் பதிவிறக்கியதும், மோசடி நபர்கள் மொபைல் போனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, முக்கியத் தகவல்களைத் திருடவோ தவறாகப் பயன்படுத்தவோ முடியும் என கேரள போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
