அடப்பாவி.. ரூ.2,250 பணத்துக்காக இப்படியா பண்ணுவாங்க?!” கூடவே இருந்த நண்பனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கொடூரன்..! சிசிடிவியை பார்த்ததும் மிரண்டுபோன போலீஸ்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவி.. ரூ.2,250 பணத்துக்காக இப்படியா பண்ணுவாங்க?!” கூடவே இருந்த நண்பனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கொடூரன்..! சிசிடிவியை பார்த்ததும் மிரண்டுபோன போலீஸ்..!!

Published

on

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ரூ.2,250 பணத்துக்காக நண்பரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். லக்னோவை சேர்ந்த பிர்ஜூவும், சச்சினும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி சச்சின், பிர்ஜூவிடம் பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று பிர்ஜூ கூறியதைத் தொடர்ந்து, சச்சின் தனது பைக்கை ஒருவரிடம் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

பின்னர் இருவரும் மதுபானம் வாங்கி, பிர்ஜூவின் அறையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதிக அளவில் மது அருந்திய சச்சின் போதையில் சுயநினைவை இழந்துள்ளார். அப்போது அவரது சட்டை பையில் ரூ.2,250 இருப்பதை பார்த்த பிர்ஜூ, அதை திருட நினைத்து சச்சினை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து பணத்தை திருடிவிட்டு அவரது உடலை வேறு ஒருவரின் வீட்டின் முன்பு வீசிவிட்டு சென்றுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பிர்ஜூ, சச்சினை கொலை செய்து உடலை வீசிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மின்சார வயர், ரூ.2,250 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in