நெஞ்சில் ஈரமே இல்லையா? பெத்த பிள்ளைக்கு மயக்க மருந்து கொடுத்து… வீட்டில் ₹70,000 கொள்ளை போனதாகக் கூறிய தாய்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்டால் அம்பலமான நாடகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சில் ஈரமே இல்லையா? பெத்த பிள்ளைக்கு மயக்க மருந்து கொடுத்து… வீட்டில் ₹70,000 கொள்ளை போனதாகக் கூறிய தாய்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்டால் அம்பலமான நாடகம்..!!

Published

on

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்த ஷகீல் அஹமத் என்பவரின் மனைவி ஷாயின் பர்வீன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 10 வயது மகன் மீது மயக்க மருந்து தெளித்து, பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ₹70,000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி டி.எஸ்.பி. மகாலட்சுமி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

போலீசார் முதற்கட்டமாக வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் வந்து சென்றதற்கான எந்தவொரு தடயமும் பதிவாகவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், புகாரளித்த தாய் ஷாயின் பர்வீனிடம் சுமார் 2 மணி நேரம் தங்களது பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

அவ்விசாரணையின் முடிவில், ஷாயின் பர்வீன் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று கடையில் அடகு வைத்ததும், பணத்தை தனது உறவினர் ஒருவருக்கு அனுப்பியதும் அம்பலமானது. பெற்ற மகனையே மயக்கமடையச் செய்து, நாடகமாடியது தெரியவந்ததை அடுத்து, ஷாயின் பர்வீன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர். இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in