மாப்ளைக்கு அவ்வளவு வெறி.. போதையில் நண்பன் உதட்டை கடித்த நபர்.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என நிரூபித்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாப்ளைக்கு அவ்வளவு வெறி.. போதையில் நண்பன் உதட்டை கடித்த நபர்.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என நிரூபித்த பகீர் சம்பவம்..!!

Published

on

திருப்பத்தூர் மாவட்டம் அகரம் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட வாய் தகராறில், பிரேம் குமார் என்ற இளைஞர் தனது நண்பரான முரளியின் உதட்டை கடித்து துப்பிய பகீர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முரளி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள முரளி அளித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரேம் குமார் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, விசாரணைக்கு பிறகு அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோபத்தின் உச்சத்தில் நடந்த இந்த சம்பவம் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற பழமொழியை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in