“நானும் விஜய் சேதுபதியும் மட்டும்தான் அன்னைக்கு அவுட்சைடர்ஸ்..” ஆனா மத்தவங்களுக்கு அப்படியில்ல..!  உண்மை உடைத்த சிவகார்த்திகேயன்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“நானும் விஜய் சேதுபதியும் மட்டும்தான் அன்னைக்கு அவுட்சைடர்ஸ்..” ஆனா மத்தவங்களுக்கு அப்படியில்ல..!  உண்மை உடைத்த சிவகார்த்திகேயன்..!!

Published

on

சிவகார்த்திகேயன் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி போரூர் அருகே தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பை நடத்தினார். சுமார் 2,000 நிர்வாகிகள் வெள்ளை உடையில் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, பெரிய பேனர்களுடன் அரசியல் மாநாடு போல அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் ஒரு தயாரிப்பாளருடன் நடந்த உரையாடலை நினைவுகூர்ந்தார். ஷூட்டிங் வந்த ரசிகர்களைப் பார்த்து அந்தத் தயாரிப்பாளர் “இதெல்லாம் தொடக்கத்தில் இருக்கும் கிரேஸ், கொஞ்ச காலம் தான் வருவார்கள்” என்று கூறியதாகவும், அதற்குத் தான் “இல்லை சார், தொடர்ந்து கூடவே வருவார்கள்” என மறுத்துப் பேசியதாகவும் கூறினார். அதற்கு அந்தத் தயாரிப்பாளர், “அவர்கள் வருவார்கள், சரி; நீங்கள் இண்டஸ்ட்ரியில் இருப்பீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கூறியதைச் சுட்டிக்காட்டி, 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரப்பூர்வமாக இந்த நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மற்றும் தனது தம்பிகளான அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், “நான் யார்? சாதாரண ஒரு ஆள். சினிமா பின்னணி ஏதும் இல்லாமல், 17 வயதிற்கு மேல் கையைப் பிடித்துக் கூட்டிச் செல்ல அப்பாவும் இல்லாத நிலையில் தனியாகத்தான் வந்தேன். டிவியில் ஒரு எபிசோட் பண்ணலாம் என நினைத்த என்னை மக்கள் என்கரேஜ் செய்து, ‘சின்ன ரோல் வேண்டாம் ஹீரோவாகவே நடி’, ‘மாஸாகவே பண்ணு’ என கைதட்டித் தூக்கி வைத்து இந்த இடத்தை அளித்தார்கள். என்னை ‘செல்ஃப் மேட்’ எனச் சொல்கிறார்கள்; ஆனால் நான் செல்ஃப் மேட் இல்லை, ‘பீப்பிள் மேட்’ – மக்களால் உருவாக்கப்பட்டவன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Advertisement

2012-இல் சினிமாவுக்குள் வரும்போது தானும் விஜய் சேதுபதியும் மட்டுமே சினிமா பின்னணி இல்லாத அவுட்சைடர்களாக வந்ததாகவும், அப்போது 80% பேர் சினிமா குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களாகவே இருந்ததாகவும் கூறினார். “டிவியில் இருந்தும் ஆங்கரிங், மிமிக்ரியில் இருந்தும் எப்படி ஒருத்தர் ஹீரோ ஆகலாம் எனச் சிலர் நினைத்தபோது, ‘நம்மில் இருந்து ஒருத்தன் ஏன் ஹீரோ ஆகக் கூடாது’ என மக்கள் என்னைக் கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார்கள். இந்த இடத்தில் என்னை வைத்த மக்களுக்குத் திருப்பி ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே ‘ஜி. தாஸ் டிரஸ்ட்’ தொடங்கினேன். அப்பா பெயரில் நான் மட்டும் தனியாக எல்லாவற்றையும் செய்துவிட முடியாது; அதற்குப் பலமாக நீங்கள்தான் இருக்கிறீர்கள்” என ரசிகர்களிடம் மனம் திறந்து பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in