அடப்பாவி நீயெல்லாம் தந்தையா..? பெற்ற மகளையே சிதைத்த கொடூரம்… வயிற்று வலியால் அம்பலமான உண்மை… போலீஸ் விசாரணைக்கு பயந்து தந்தை எடுத்த முடிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவி நீயெல்லாம் தந்தையா..? பெற்ற மகளையே சிதைத்த கொடூரம்… வயிற்று வலியால் அம்பலமான உண்மை… போலீஸ் விசாரணைக்கு பயந்து தந்தை எடுத்த முடிவு..!!

Published

on

மதுரையில் 15 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவரை 6 மாத கர்ப்பமாக்கிய தந்தை, போலீஸ் விசாரணையின் போது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயிற்று வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து, மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், குடிபோதையில் தந்தையே இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த புதன்கிழமை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

Advertisement

அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணைக்குப் பயந்து அவர் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில், சிறுமி குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in