“உன் அம்மாவுடன் போய் படு..” கணவனைக் கூனிக்குறுக வைத்த அந்த ஒரு வார்த்தை.. மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த தரமான சவுக்கடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன் அம்மாவுடன் போய் படு..” கணவனைக் கூனிக்குறுக வைத்த அந்த ஒரு வார்த்தை.. மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த தரமான சவுக்கடி..!!

Published

on

தூத்துக்குடியைச் சேர்ந்த கணவன்-மனைவி இடையிலான விவாகரத்து வழக்கில், கணவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தனது மனைவி தன்னை மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாகவும், குறிப்பாக “உன் அம்மாவுடன் போய் படு” என்று பேசியதாகவும் அவர் விவாகரத்து மனுவில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் இந்தத் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, தங்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி மனைவி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனைவியின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், கணவரைப் பார்த்து மனைவி கூறிய இத்தகைய வார்த்தைகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் தனது பரபரப்புக் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in