LATEST NEWS
மஞ்சக் காட்டு மைனா….! என்ன கொஞ்சி கொஞ்சி போனா….! புடவையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி….!!!!
மாடல் அழகியாக விளங்கிய ஐஸ்வர்யா லட்சுமி மலையாள திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
இவர் தென்னிந்திய அறிமுக நாயகியாக ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, கிடைக்கும் நேரத்தில் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
சில சமயங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடும் இவர் திடீரென்று மங்களகரமாக புடவையில் புகைப்படம் எடுத்து வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது instagram பக்கத்தில் வெளியிடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.
