பொன்னியின் செல்வன் எப்படி?….. டிவிட்டரில் தெறிக்கும் விமர்சனம்….. மாஸ் சம்பவம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொன்னியின் செல்வன் எப்படி?….. டிவிட்டரில் தெறிக்கும் விமர்சனம்….. மாஸ் சம்பவம்….!!!

Published

on

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் படம் குறித்த விமர்சனங்கள் குவிந்து வருகின்றது .

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்றே வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது.

Advertisement

படத்தை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் படம் குறித்த அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர். சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது twitter பக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் குறித்த ரிவ்யூவை தெரிவித்து வருகின்றனர். பலரும் பொன்னியின் செல்வன் நமது பெருமை, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாதி மணிரத்தினத்தின் காவியத்திற்கு ஒரு காவியம். சோழர் சாம்ராஜ்யத்தின் அவரின் சித்தரிப்பு சினிமா வடிவம் பெறுவதை கண்டு கல்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படத்தில் போர் மற்றும் தேவையில்லாத மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. டெக்னிகல் டீமுக்கும், படக்குழுவிற்கும் ஒரு பெரிய நன்றி. ரஹ்மான் அவர்களின் இசை படத்திற்கு ஒரு பெரிய பலம். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களின் நடிப்பு அட்டகாசம். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர் என்று பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றன. இதை பார்த்த பலரும் இந்த படம் கட்டாயம் பாகுபலி திரைப்படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in