LATEST NEWS
பெண்ணை அடித்ததால்….. ஜெயிலுக்குப் போன எஸ்.ஜே.சூர்யா….. இது எப்ப நடந்துச்சு?….. வெளியான தகவல்….!!!!
எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல வருடம் போராடி வாலி என்ற திரைப்படத்தை எடுத்தார். இந்த திரைப்படத்தில் அஜித்தை வில்லனாகவும், ஹீரோவாகவும் காண்பித்து ரசிகர்களுக்கு புதுவிதமான ஒரு அனுபவத்தை கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து அப்படியே குஷி திரைப்படத்தை இயக்க அந்த திரைப்படமும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நியூ என்ற திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார்.
இங்குதான் அவருக்கு சிக்கல் ஆரம்பித்தது. முதலில் அஜித் இந்த திரைப்படத்தில் ஹீரோவாகவும் ஜோதிகாவும் நடிக்க ஓகே வாங்கிவிட்டார். அதன் பிறகு சில காரணங்களினால் அஜித் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் நியூ படத்தில் தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்து நாயகனாக இறங்கினார். ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளுடன் இந்த திரைப்படம் இயக்கப்பட்டதால் சென்சருக்கு சென்றது.
அப்போது இந்த படத்தை பார்த்த அதிகாரி இதற்கு யூவும் இல்லை யூஏவும் இல்லை என்றார். அதுமட்டுமல்லாமல், எஸ்.ஜே சூர்யாவை தரக்குறைவாக பேசினார் . இதனால் கடுப்பான அவர் கையில் இருந்து செல்போனை அவர் மீது வீசி எறிய பிரச்சனை வெடித்தது. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. பின்னல் ஜாமினில் விடுதலையானார். அது மட்டும் இல்லாமல் இவருக்கும், சிம்ரனுக்கும் நெருக்கமான காட்சி ஒன்று போஸ்டராக வெளியாக மக்கள் பலரும் முகம் சுளிக்க தொடங்கினர். இருப்பினும் பல தடைகளை தாண்டி அந்த படம் ஹிட்டானது.
