எக்ஸாம் பீஸ் கட்டணும் அண்ணா….! மெசேஜ் செய்த மாணவிக்கு….. உதவிக்கரம் நீட்டிய ஜிவி பிரகாஷ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எக்ஸாம் பீஸ் கட்டணும் அண்ணா….! மெசேஜ் செய்த மாணவிக்கு….. உதவிக்கரம் நீட்டிய ஜிவி பிரகாஷ்….!!!!

Published

on

ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலின் மூலமாக தனது மழலை குரலில் பாடி பிரபலமானவர் ஜீவி பிரகாஷ். பின்னர் மெல்ல மெல்ல தனது இசையால் முன்னுக்கு வந்த இவர் வெயில் படத்தில் வெயிலோடு விளையாடி என்ற பாடலின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானர். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், விசாரணை, அசுரன், ஆடுகளம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தற்போது இவருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. சமீபத்தில் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஜிவி பிரகாஷிடம் கல்லூரி மாணவர் ஒருவர் தனது படிப்பிற்கு உதவி செய்ய கேட்டிருந்தார்.

Advertisement

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “ஹாய் சார் என்று தனது பெயரை அறிமுகம் செய்து நான் கும்பகோணம் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் தேர்வு தொடங்கியது. அதற்கான பீஸ் கட்ட உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதை பார்த்த ஜிவி பிரகாஷ் உடனடியாக அவரின் முகவரியை தெரிந்து கொண்டு உதவி கேட்ட மாணவியின் நம்பரை வாங்கி அவருக்கு ஜிபே  மூலம் பணம் அனுப்பி உதவி செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in