பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்….. 8 ஆண்டுகள் காத்திருந்த தம்பதி….. வைரலாகும் புகைப்படம்…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்….. 8 ஆண்டுகள் காத்திருந்த தம்பதி….. வைரலாகும் புகைப்படம்…!!!!

Published

on

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன- மீனாட்சி தொடர் மிகவும் பிரபலம். இந்த தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா. ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். பிரபல ரேடியோ ஜாக்கியான மிர்ச்சி செந்தில் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களின் மூலமாக பிரபலமானவர்.

அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் நெடுங்காலமாக ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே கிடைத்தது. ஜோடியாக இருந்த இவர்கள் பலரின் மனங்களை கவர்ந்தவர். இவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  திருமணத்திற்கு பின்னர் மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார் செந்தில்.

Advertisement

இவர்கள் இருவரும் இணைந்து கல்யாணம் கண்டிஷன் அப்ளை என்ற வெப் சீரிஸிலும் நடித்தனர். திருமணமாகி எட்டு ஆண்டுகளான நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோக்களை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த வளைகாப்பு புகைப்படங்களை தொடர்ந்து ரசிகர்கள் செந்தில் ஸ்ரீஜா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in