LATEST NEWS
என்னுடைய மகள் என்னை ‘அங்கிள்; என்று அழைக்கிறாள்….! இதுதான் கொடுமை….. கண்ணீருடன் கூறிய ராபர்ட் மாஸ்டர்….!!!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது .இதில் தற்போது போட்டியாளர்கள் தங்களின் கதையை கூறி வருகின்றனர். இன்று டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தான் வீட்டில் கடைக்குட்டி பையன் என்பதால்,பெற்றோருக்கு என் மீது அதிகம் எதிர்பார்ப்பு ஆனால் சின்ன வயதில் எனக்கு போலியோ அட்டாக் கால் சரியாக வரவில்லை,
பின்னர் அப்பாவின் முயற்சியால் அது சரியானது. அதன் பின் மற்றவர்கள் போல எனக்கும் காதல் வந்தது பேரை சொல்ல விரும்பவில்லை .அவரை திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு பிரிந்து விட்டோம்.அது ஏன் என எனக்கும் தெரியவில்லை, எனது மகளுக்கு நான் அப்பா என தெரியுமா? தெரியாதா? என்று கூட எனக்கு தெரியவில்லை, என் முதல் மனைவி இன்னொரு திருமணம் செய்து கொண்டார் .
ஆனால் என் மகளுக்கு நான் அப்பா என நான் இறந்த பிறகாவது கூறுங்கள். இந்த ஷோவை அவர் பார்ப்பார் தெரிந்து கொள்வார் என்பதற்காக தான் நான் இதற்கு வந்தேன். இரண்டு வயது வரை குழந்தையை பார்த்திருக்கிறேன். பின் ஏழு வயதில் ஒருமுறை பார்த்தேன் .அப்போது ஹாய் அங்கிள் என்று கூறினார். அப்போது எனக்கு மிகப்பெரிய வலி ஏற்பட்டது என்று ராபர்ட் அவர்கள் பேசி இருந்தார்கள்.
