LATEST NEWS
வீட்டில் பெண்களிடம் சில்மிசம் செய்யும் ‘அசல் கோளாறு’….. கொந்தளிக்கும் பெண் போட்டியாளர்கள்….!!!!
பிக்பாஸ் வீட்டிற்குள் அசல் கோளாறு பெண்களிடையே நடந்து கொள்ளும் விதம் தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 10 பெண்கள் 9 ஆண்கள் ஒரு திருநங்கை என்று 20 பேர் கலந்து கொண்டுள்ளனர்.இந்த சீசன் மற்ற சீசன் கலை காட்டிலும் விறுவிறுப்பாக சென்று வருகின்றது.
இந்த சீசனில் அசல் கோளாறு என்ற சென்னையை சேர்ந்த கானா பாடும் பாடகர் ஒருவர் வந்திருக்கிறார் .அவர் பெண்களிடத்தில் நடந்து கொள்ளும் முறை தவறாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகின்றது. இவர் நிகழ்ச்சி ஆரம்பித்த முதலே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று வம்பு இழுத்து வருவதாக கூறியிருந்தார்கள் .
இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த மாடல் அழகி நிவாசினியிடம் கடலை போட ஆரம்பித்துள்ளார் அசல். இவர் நீச்சல் குளம் அருகில் படுத்துக்கொண்டு அவரிடம் கடலை போட்டு வருகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
