LATEST NEWS
நடிகை பார்வதியின் வீட்டில் திருடு போன பொருளின் விலை…! எவ்வளவு தெரியுமா?….. அதிர்ச்சி சம்பவம்…..!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் . அதைத் தொடர்ந்து தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டில் ஆறு லட்சம் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள விளைவு உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள் திருடு போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐம்பதாயிரம் மதிப்புள்ள லேப்டாப் செல்போன்களும் திருடப்பட்டுள்ளது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
