LATEST NEWS
“அடக்கடவுளே..! கார்ப்பரேட் வேலையை விட்டால் இவ்வளவு நரகமா..? 164 நாள்களுக்குப் பிறகு பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!”
சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்படும் “9 முதல் 5 வேலையை விட்டுவிட்டு உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றுங்கள்” என்ற போலித் தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் கசப்பான உண்மையை, அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநரான ரூயி தனது அனுபவத்தின் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார. நிலையான வருமானம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்ட பிறகு, நாய் பராமரிப்பு, யோகா ஆசிரியர், உள்ளடக்க உருவாக்கம் எனப் பல வழிகளில் முயன்றும் பணம் சம்பாதிக்க முடியாமல் அவர் திணறியுள்ளார். அதோடு, செல்லப் பிராணியின் அறுவை சிகிச்சை மற்றும் அதிகரித்த செலவுகளால் அவர் கடுமையான மன அழுத்தத்தையும் எதிர்கொண்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DbTOIRHi_kE/?utm_source=ig_web_button_share_sheet
சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் ஆடம்பரமான மற்றும் வெற்றிகரமான பக்கங்களை மட்டுமே காட்டும் நிலையில், பெருநிறுவன உலகை விட்டு வெளியேறுவதன் யதார்த்தமான மற்றும் கடினமான பக்கத்தை ரூயி தைரியமாகப் பகிர்ந்துள்ளார். பல பயனர்கள் இதனை ஒரு தோல்வியாகக் கருதாமல், தனக்கு எது சரிவருகிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி தொடர்ந்து முயலுமாறு அவருக்கு ஆறுதலும் ஊக்கமும் அளித்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, உறுதியான பொருளாதார ஆதரவு அல்லது சரியான திட்டம் இல்லாமல் அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் எந்தளவிற்கு மன உளைச்சலைத் தரும் என்பதை இளைஞர்களுக்குப் புரியவைத்துள்ளது. ஆர்வத்தைப் பின்பற்றுவது முக்கியம் என்றாலும், அதற்கான மாற்று வழிகளையும் நிதிப் பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்ட பிறகே பெரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இத்தகைய உண்மையான பகிர்வுகள் சமூகத்திற்கு வழங்குகின்றன.
