LATEST NEWS
3 கிரங்கங்கள் உச்சத்தில் இருக்கு… திரிஷா தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்… ஜாதகத்தை வைத்து கணித்து சொன்ன பிரவீன் காந்தி…!!
இயக்குநரும் விமர்சகருமான பிரவீன் காந்தி தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது, நடிகை த்ரிஷா எதிர்காலத்தில் தமிழக முதலமைச்சராக வருவார் என்று தெரிவித்துள்ளார். தான் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, முன்னணி நடிகையாக இருந்த சிம்ரனுக்குப் பின்னால் த்ரிஷா நின்றிருந்ததைக் கண்டதாகவும், அப்போது தனக்குப் போட்டியாக ஒருவர் வந்துவிட்டார் என்பதை சிம்ரன் உணர்ந்துகொண்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.youtube.com/channel/UCmyKnNRH0wH-r8I-ceP-dsg
மேலும், த்ரிஷாவின் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததாகக் கூறிய பிரவீன் காந்தி, அதில் மூன்று முக்கிய கிரகங்கள் உச்சத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்த யோகமான கிரக நிலைகளின் காரணமாகவே, த்ரிஷா எதிர்காலத்தில் நிச்சயமாகக் கட்சியின் தலைவராகவோ அல்லது முதலமைச்சராகவோ பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெறுவார் என அவர் உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
