ஆண்டுகள் கடந்தும் அடங்காத எப்ஸ்டீன் ரகசியங்கள்… 957 கோடி ரூபாய் சொத்தை அள்ளப்போகும் பெலாரஸ் அழகி… ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதிய ரகசிய உயிலால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆண்டுகள் கடந்தும் அடங்காத எப்ஸ்டீன் ரகசியங்கள்… 957 கோடி ரூபாய் சொத்தை அள்ளப்போகும் பெலாரஸ் அழகி… ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதிய ரகசிய உயிலால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு..!!

Published

on

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரணமடைந்து பல ஆண்டுகள் கடந்த பிறகும், அவரது ரகசியங்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. தற்போது அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களின்படி, எப்ஸ்டீனின் உயிலில் கரீனா சூலியக் என்ற பெண்ணின் பெயர் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. எப்ஸ்டீன் தனது ரகசிய அறக்கட்டளை மூலம், அவருக்கு ₹957 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் 33 காரட் வைர மோதிரத்தை உயிலாக எழுதி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வதந்திகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளன.

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவரான கரீனா, கடந்த 2010-2011 காலகட்டத்தில் மாணவர் விசாவில் உயர்கல்விக்காக அமெரிக்காவிற்கு வந்துள்ளார். அந்தச் சமயத்தில் தான் எப்ஸ்டீனைச் சந்தித்த அவர், சுமார் எட்டு ஆண்டுகள் அவருடன் நெருங்கிய காதலில் இருந்துள்ளார். கரீனாவின் படிப்புச் செலவுகள், சொகுசு வாழ்க்கை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எப்ஸ்டீன் நிதியுதவி செய்துள்ளதோடு, அவரது பிரம்மாண்ட வீடுகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் கரீனாவிடமே ஒப்படைத்திருந்தார்.

Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், இந்த உயில் மாற்றங்களை அவசர அவசரமாகச் செய்துள்ளார். மேலும், சிறையில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள், அவர் மேற்கொண்ட கடைசி தொலைபேசி அழைப்பும் கரீனாவுக்குத்தான் செய்யப்பட்டுள்ளது என புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடுகள் வழங்கிய பிறகு, எஞ்சியிருக்கும் இந்த இமாலய சொத்துக்கள் கரீனாவுக்குச் முழுமையாகச் சேருமா என்பது தற்போதைய சட்டப் போராட்டங்களின் முடிவிலேயே தெரியவரும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in