“எனக்கு காதலி இருக்கிறார், விரைவில் நானே அறிமுகப்படுத்துவேன்”…… திருமணம் குறித்து விஷால் ஓபன் டாக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு காதலி இருக்கிறார், விரைவில் நானே அறிமுகப்படுத்துவேன்”…… திருமணம் குறித்து விஷால் ஓபன் டாக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் லத்தி திரைப்படம் பெரிய அளவில் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே விஷாலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் ஆக இருந்த நிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நின்றது. இதனைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களில் அனைவரும் விஷால் திருமணம் எப்போது என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் விஷால் தற்போது நாடோடிகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இருந்தாலும் இது தொடர்பாக இருதரப்பினரும் இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனக்கு காதலி இருக்கிறார், விரைவில் அவரை அறிமுகப்படுத்துவேன், தன் திருமணம் குறித்து தெரிவிப்பேன் என விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in