LATEST NEWS
ரட்சிதாவிடம் சில்மிஷம் செய்யும் ராபர்ட் மாஸ்டர்…. கோபத்தில் EX கணவர் போட்ட பதிவு…. என்ன சொன்னார் தெரியுமா….???
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மக்கள் எதிர்பார்த்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்படி ஒருவர்தான் விஜய் டிவி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரட்சிதா. இவர் விஜய் டிவியில் இருந்து விலகி இறுதியாக கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வந்தார்.
அந்தத் தொடர் முடிந்த கையோடு ரட்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் செய்து வரும் பல வேலைகளும் மக்களை கோபமடைய வைத்துள்ளது. ரச்சிதா தனது பக்கம் இருப்பதை மிகத் தெளிவாக கூறியும் அவரை விடாது ராபர்ட் மாஸ்டர் தொந்தரவு செய்து வருகின்றார். இதனால் ரசிகர்கள் we stand for rachitha என்று பதிவு செய்து வருகின்றனர்.
அதனைப் போலவே ரட்சிதாவின் முன்னாள் கணவரும் ரட்சிதாவிற்கு ஆதரவு தெரிவித்து பதிவு போட்டுள்ளார். அந்தப் பதிவில், இதைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன், இதற்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். ஒரு பெண் அனைவரிடமும் நட்பாக மகிழ்ச்சியாக இருப்பதால் அவள் எல்லாத்துக்கும் சரி என்று சொல்லிவிடுவார் என அர்த்தம் கிடையாது. எல்லா மனிதர்களும் அமைதியான சுதந்திரத்துடன் வாழ வசதியான சமுதாயத்தை உருவாக்க சில முட்கள் போன்ற மனிதர்கள் எரிய வேண்டும் என அவர் பதிவிட்டு உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
