LATEST NEWS
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் வீட்டில் அடுத்தடுத்து மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இந்நிலையில் மகேஷ் பாபுவின் தந்தையும் பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணா (80) இன்று உயிரிழந்தார். கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வளம் வந்தவர்.
திடீரென மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கிருஷ்ணாவின் மனைவி இந்திரா தேவி, மகன் ரமேஷ் பாபு ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு இது மேலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
