LATEST NEWS
என்ன பத்தி யாராவது இப்படி பேசுனா அவ்வளவுதான்…. நடிகர் பார்வதி நாயர் ஆவேசம்…. என்ன நடந்தது….????
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பார்வதி நாயர் வசித்து வரும் நிலையில் அவரின் வீட்டில் ஆறு லட்சம் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள் திருட்டுப் போனதாக அண்மையில் தகவல் வெளியானது.அது மட்டுமல்லாமல் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ள நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தற்போது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சில ஊடகங்கள் பார்வதி நாயர் இன் புகழுக்கும் நற்பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. அதனால் அவதூறு பரப்பினால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
