LATEST NEWS
திரும்பவுமா?…. மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் அசல் கோளாறு…. ஆனா ஒரு ட்விஸ்ட்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜிபி முத்து தானாக வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா மற்றும் மகேஸ்வரி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டனர்.
இவர்களில் பார்வையாளர்களிடம் அதிக வெறுப்பை பெற்றவர் என்றால் அது அசல் கோளாறு மட்டும்தான். ஏனென்றால் அவர் பெண்களிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டது பார்வையாளர்கள் மத்தியில் கோபத்தை வெளிப்படுத்திய நிலையில் அதன் காரணமாகவே அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அசல் தான் எந்த பெண்களிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை என வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக அசல் கோளாறு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறினால் தான் அசல் வருவார் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
