“அந்த காதலை மட்டும் நான் இழக்கவில்லை”…. மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சமந்தா…. கலங்கிய ரசிகர்கள்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த காதலை மட்டும் நான் இழக்கவில்லை”…. மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சமந்தா…. கலங்கிய ரசிகர்கள்…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடினமான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

தற்போது எழுந்து கூட நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருக்கும் சமந்தா வெளிநாட்டில் சிகிச்சைக்காக செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் பரவியது. சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சமந்தா சென்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதில் ஒல்லியான முகம் மற்றும் நடக்க முடியாமல் சோகமாக சென்றதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் நேற்று சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புராண கதை அம்சம் கொண்ட சகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Advertisement

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவை பார்த்து படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி இயக்குனர் குணசேகர் பேசினார். அவரின் பேச்சைக் கேட்டவுடன் எமோஷனலான சமந்தா மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பிறகு பேசிய சமந்தா, இந்த ஒரு தருணத்திற்காக தான் நான் பல நாட்களாக காத்திருந்தேன். எதிர்பார்த்தபடி திரைப்படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படிதான் சகுந்தலம் திரைப்படத்திற்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்று சமந்தா பேசினார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in