LATEST NEWS
அய்யோ இவரா?…. பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல போட்டியாளர்…. கேட்டதும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 100 நாட்களைக் கடந்த இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் பைனல் என்பதால் டைட்டில் ஜெயிக்கப் போவது யார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டியை எடுத்துச் செல்லும் வாய்ப்பு பிக் பாஸ் வீட்டில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஏற்கனவே கதிரவன் மூன்று லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் நேற்று மற்றொரு முக்கிய போட்டியாளர் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அதாவது 13 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு அமுதவாணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனென்றால் இறுதிவரை அமுதவாணன் இருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் அவர் திடீரென பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
