90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அனைவரையும் கவர்ந்த… நடிகை ரம்யா கிருஷ்ணனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அனைவரையும் கவர்ந்த… நடிகை ரம்யா கிருஷ்ணனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தென்னிந்திய நடிகைகளின் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

நடிகை சௌந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர்.

அதன் பிறகு பல சாமி திரைப்படங்களிலும் நடித்தார். அதுமட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியுடன் மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

1985 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் தற்போது வரை அதே இளமையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இதனிடையே ரம்யா கிருஷ்ணன் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற நிலையில் இதனை தொடர்ந்து அடுத்ததாக மற்றொரு நடன நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்க உள்ளார்.

தற்போது 50 வயதை கடந்துள்ள ரம்யா கிருஷ்ணன் இதுவரை இளம் நடிகைகளை போல இவரும் தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

சுமார் 35 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். இதனிடையே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ண வம்சி என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் ஐபிஎல் போட்டியை காண வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Advertisement

இதனைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in