LATEST NEWS
பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை ரம்பா…. வெளியான புகைப்படங்கள்…!!!
இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.
அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.
இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ரம்பா குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகின்றார்.
இந்நிலையில் ரம்பா நேற்று தனது குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
