இன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?… இதோ முழு லிஸ்ட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?… இதோ முழு லிஸ்ட்…!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். பொதுவாகவே நடிகர் நடிகைகள் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஏதாவது ஒரு படிப்பை படித்துவிட்டு ஒரு துறையில் பணியாற்றிய பிறகுதான் சினிமாவில் நுழைந்து இருப்பார்கள். அப்படி பொறியியல் படித்துவிட்டு கோலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் கார்த்திக் குமார்:

Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர்தான் கார்த்திக் குமார். குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு பெற்றது. இவர் ஏவம் கார்த்திக் என்று சினிமாவில் அழைக்கப்படுகிறார். இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வேதியியல் பொறியியல் பட்டதாரி ஆவார்.

சிவகார்த்திகேயன்:

Advertisement

நகைச்சுவை மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் ஜேஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்தவர்.

கௌதம் மேனன்:

Advertisement

தற்போது சினிமாவில் பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கௌதம் மேனன். இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. இவர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் படித்து அங்கேயே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

நடிகை டாப்ஸி:

Advertisement

தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் டாப்ஸி. தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் போட்டோ சூட் நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் குருதேக் பகதூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அதேசமயம் தொழில்துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நடிகர் பிரசன்னா:

Advertisement

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் பிரசன்னா தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரசன்னா சாரநாதன் பொறியியல் கல்லூரியில் EEE பட்டம் பெற்றவர்.

ஆர்யா:

Advertisement

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழும் நடிகர்களில் ஒருவரான ஆர்யா தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் சென்னையில் கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி:

Advertisement

சிவகுமாரின் இளைய மகனும் நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த தம்பியுமான நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்று விட்டார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை மற்றும் தொழில்துறை பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

கணேஷ் வெங்கட்ராமன்:

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

சங்கர் மகாதேவன்:

Advertisement

சினிமாவில் பிரபலமான பாடகர்களில் ஒருவரான இவர் 1988 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பட்டம் பெற்றார். ராம் ராவ் ஆதித் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டம் பெற்றார். இவர் திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு ஆரக்கில் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார்.

நடிகை கனிகா:

Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் இளங்கலை தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in