LATEST NEWS
அடுத்த படத்திற்கு இப்படி ஒரு கெட்டப்பா?… அருள் நிதியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அருள்நிதி. தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் முதன்முதலில் பாண்டியராஜன் இயக்கிய வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். பல வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை தரமான படங்களை மட்டுமே மக்களுக்கு கொடுப்பேன் என கூறி நடித்து வருகின்றார்.
இவர் நடிப்பில் வெளியான மௌனகுரு, டிமான்டி காலனி மற்றும் ஆறாவது சினம் உள்ளிட்ட பல படங்களும் கதையோடு அருள்நிதி நடிப்பையும் சேர்த்து பேசும் படங்களாக உள்ளன. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கழுவேத்தி மூர்கன், திருவின் குரல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருள்நிதி டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அருள்நிதி தனது அடுத்த படத்திற்காக வயதான தோற்றத்திற்கு மாறியுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
