LATEST NEWS
“நிஜமா, இல்ல AI-ஆ..?!” முகத்தில் அடர்த்தியான முடியுடன் பிறந்த குழந்தை.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ… மருத்துவர்கள் கொடுத்த அதிரடி விளக்கம்..!!
முகத்தில் அடர்த்தியான முடிகளுடன் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இது முற்றிலும் உண்மை என்று நம்பி ஆச்சரியமடைந்து வரும் வேளையில், மற்றொரு தரப்பினர் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று கூறி தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் விளக்கம் அளிக்கையில், குழந்தைகளுக்கு இது போன்ற நிலை ஏற்படுவது முற்றிலும் சாத்தியம் என்றும், இதற்கு ‘லனுகோ’ என்ற மருத்துவ நிலை காரணமாக இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். லனுகோ என்பது பொதுவாகக் கருவறையில் இருக்கும் போதே சில குழந்தைகளுக்கு உடலிலும் முகத்திலும் வளரக்கூடிய ஒரு வகையான மெல்லிய முதியாகும். இது போன்ற முடிகள் குழந்தை பிறந்த சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ தானாகவே உதிர்ந்து மறைந்துவிடும் என்பதால், இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
