CRIME
“மக்களை ஏமாத்திட்டீங்க..!” பிரிட்டானியா பிரட் விளம்பரத்தில் அம்பலமான பொய்… மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!
‘100% முழுக்கோதுமை பிரட்’ எனக் கூறி விளம்பரம் செய்த பிரிட்டானியா நிறுவனத்திற்கு, நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிறுவனம் தனது பிரட் தயாரிப்புகளில் முற்றிலும் முழுக்கோதுமை மாவு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக விளம்பரம் செய்து நுகர்வோரை ஏமாற்றியதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடத்திய தீவிர விசாரணையில், பிரிட்டானியா நிறுவனத்தின் பிரட்களில் 62% மட்டுமே முழுக்கோதுமை மாவு இருப்பதும், மீதமுள்ள பகுதி நுகர்வோருக்குத் தெரிவிக்கப்படாத பிற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, நுகர்வோரைத் தவறான தகவல்கள் மூலம் ஈர்க்க முயன்ற அந்த விளம்பரத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிரிட்டானியா நிறுவனத்திற்கு ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
