வங்கக் கடலில் உருவாகிறது ‘அசுரன்’ புயல்.. நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.. வானிலை மையம் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வங்கக் கடலில் உருவாகிறது ‘அசுரன்’ புயல்.. நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.. வானிலை மையம் எச்சரிக்கை..!!

Published

on

வங்கக் கடல் பகுதியில் நாளை (நவம்பர் 13) ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று, வரும் நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொள்ளும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், பின்னர் மேலும் தீவிரமடைந்து புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

புதிதாக உருவாகவுள்ள இந்தப் புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்துள்ள ‘அக்வான்’ (Akvan) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. பாரசீக மொழியில் ‘அக்வான்’ என்பதற்கு ‘அசுரன்’ என்று பொருளாகும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in