LATEST NEWS
“பாவம் முதலமைச்சர்… அந்த தம்பி நல்ல தம்பி…” சட்டம்-ஒழுங்கை மறைக்க தவெக அரசு நாடகம் எழுதுகிறது..! தவெக அரசை வெளுத்து வாங்கிய ஆ.ராசா..!!
சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மறைப்பதற்காகவே தவெக அரசு தினந்தோறும் புதுப்புது நாடகங்களை அரங்கேற்றி வருவதாக ஆ.ராசா அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “இன்று என்னை விசாரணைக்கு அழைத்த அதிகாரிகளுக்கு என்ன கேள்வி கேட்பது என்றே தெரியவில்லை; விசாரணை தொடர்பான கம்ப்ளைண்ட் மற்றும் FIR நகல் கூட எனக்கு வழங்கப்படவில்லை” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டதும், கைதிகள் தப்பி ஓடியதாகக் கூறப்படும் சம்பவங்களும் வெறும் டிராமா என்று சாடினார். அத்துடன், “பாவம் முதலமைச்சர்… அந்த தம்பி நல்ல தம்பி” என்றும் தவெக அரசை கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
