LATEST NEWS
நடிகை கனகாவின் வீட்டில் திடீரென பற்றி எரிந்த தீ…. அலறிக் கொண்டு ஓடிய நடிகை…. பெரும் பரபரப்பு….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை கனகா. அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் பட புகழ் கனகா என்றால் அனைவருக்கும் தெரியும். ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு கொண்டாடப்பட்ட படம்தான் கரகாட்டக்காரன். இந்தத் திரைப்படத்தில் வரும் வாழைப்பழம் காமெடிக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த திரைப்படத்தை தவிர கனகா தங்கமான ராசா, கோவில் காலை, அதிசய பிறவி மற்றும் விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தற்போது சென்னையில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சென்னையில் உள்ள கனகாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அவரின் பூஜையறையில் விளக்கு கீழே விழுந்து தீப்பற்றி உள்ளது. இந்த தீ வீடு முழுவதும் பரவியதால் துணிகள் உள்ளிட்ட பொருள்கள் எறிய தொடங்கின. நடிகை கனகா வீட்டிலிருந்து அலறி அடித்து வெளியேறியதாகவும் அதன் பிறகு தகவலின் பெயரில் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்ததாகவும் கூறப்படுகிறது.
