LATEST NEWS
Salon ஓனர்களே கொஞ்சம் ஓரமா போங்கப்பா… இப்படி ஒரு ஹேர்கட்டை ஜென்மத்துக்கும் பார்த்திருக்க மாட்டீங்க..! இணையத்தை அலறவிடும் அருணாச்சல பாட்டி..!!
அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள ‘ஆதி’ பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, நவீன கத்தரிக்கோல் அல்லது ட்ரிம்மர் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தாமல், ‘தாஓ’ எனப்படும் பாரம்பரியக் கத்தியைக் கொண்டு முடி வெட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எந்தவிதப் பயமும் இன்றி மிகவும் துல்லியமாகவும் நம்பிக்கையுடனும் அவர் இந்த வேலையைச் செய்யும் விதம் இணையவாசிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
‘pepa.assam’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தப் பாட்டி தன் பல வருட அனுபவத்தின் மூலம் மிகவும் லாவகமாகக் கத்தியைக் கையாண்டு ஒருவருக்கு முடி வெட்டுகிறார். அவரது கைகள் சிறிதும் நடுக்கமின்றி, கத்தியை முழு கட்டுப்பாட்டுடன் இயக்கும் விதம், இது அவரது நீண்டகாலப் பயிற்சியிலும் அனுபவத்திலும் உருவான திறமை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
https://www.instagram.com/reel/DaDSh2GBG5t/?utm_source=ig_web_button_share_sheet
நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், இந்தியாவின் பல பகுதிகளில் இத்தகைய பாரம்பரியக் கலைகளும் நுட்பங்களும் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அந்தப் பாட்டியின் கைதேர்ந்த திறமையையும், இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையையும் போற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
