LATEST NEWS
ஏசி இருக்கு… ஆனா போடா முடியாது..! கரண்ட் பில்லைக் குறைக்க இப்படியொரு வழியா..? வைரலாகும் கணவனின் மாஸ்டர் பிளான்..!!
சுமார் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கொளுத்தும் கோடை வெயிலில், வீட்டில் ஏசி இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாமல் அவதிப்படும் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரீமா என்ற பெண் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், வீட்டின் அறையில் ஏசி பொருத்தப்பட்டிருந்தும் அவர் கடும் வெப்பத்தால் தவிப்பதைக் காண முடிகிறது.
இந்த நிலைக்குக் காரணம் என்னவென்றால், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணின் கணவர் தினமும் அலுவலகத்திற்குச் செல்லும்போது ஏசியின் ரிமோட்டைத் தன்னுடனே எடுத்துச் சென்று விடுகிறார். வீட்டில் ஏசி இருந்தாலும் ரிமோட் இல்லாததால், அந்தப் பெண்ணால் ஏசியை ஆன் செய்ய முடிவதில்லை என்ற உண்மை அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/Da2rbMfh2a6/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கணவரின் இந்தச் செயல் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான விசித்திரமான வழி என்று பலர் சிரித்து மகிழ்ந்தாலும், சிலர் இது அளவுக்கு அதிகமான கஞ்சத்தனம் என்று விமர்சித்துள்ளனர். அதேவேளையில், இப்போது பல ஏசிகளை செல்போன் ஆப் மூலமாகவும் இயக்க முடியும் என்பதால் ரிமோட்டை எடுத்துச் செல்வது பலன் தராது என்றும் சிலர் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
