LATEST NEWS
“நீங்கள் நாட்டிற்கு… நாங்கள் உங்களுக்கு..!” கதவோரம் அமர்ந்த ராணுவ வீரருக்கு… ஓடிவந்து உதவிய TTE…! இணையத்தில் இதயங்களை வெல்லும் வீடியோ..!!
ரயிலில் கழிவறை மற்றும் கதவுக்கு அருகில் தரையில் அமர்ந்து பயணித்த ஒரு இளம் இராணுவ வீரரைக் கண்டு, ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் ஜிதேந்திர மிஸ்ரா காட்டிய மனிதநேயம் இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. வழக்கமாக முறையான இருக்கை வசதி இன்றி பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் சூழலில், இந்த அதிகாரி அந்த வீரரின் நிலைமையைப் புரிந்து கொண்டு அவருக்கு உதவ முன்வந்தார்.
இராணுவ வீரர் தனது அடையாள அட்டையைக் காட்டி, இருக்கை கிடைக்காததால் கதவருகே அமர்ந்து பயணிப்பதாகக் கூறினார். இதைக் கேட்டவுடன், TTE ஜிதேந்திர மிஸ்ரா உடனே தனது கையடக்கக் கணினியில் காலியாக உள்ள இருக்கைகளைச் சரிபார்த்தார். ஸ்லீப்பர் வகுப்பில் காலியாக இருந்த ஒரு கீழ் படுக்கையை அந்த வீரருக்கு ஒதுக்கீடு செய்து, அவரை அழைத்துச் சென்று அமர வைத்தார். மேலும், அவருக்குக் குடிநீர் பாட்டிலும் வழங்கி, நாட்டின் சேவைக்கான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டி கை குலுக்கி தனது மரியாதையைச் செலுத்தினார்.
https://www.instagram.com/reel/DZ_evaCzKLv/?utm_source=ig_web_button_share_sheet
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோவை TTE ஜிதேந்திர மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நீங்கள் நாட்டிற்காக சேவை செய்கிறீர்கள் என்றால், நாங்களும் இந்திய ரயில்வேயும் உங்களுக்காக எப்போதும் தயாராக இருக்கிறோம், ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார். மனிதநேயத்தையும் இராணுவ வீரர்களுக்கான மரியாதையையும் வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வருகிறது.
