தவெகவில் அடுத்தடுத்து வெடிக்கும் லஞ்சப் புகார்!.. “ரூ. 5 லட்சம் கேட்டார் மாவட்டச் செயலாளர்”.. ஞானசௌந்தரி வைத்த புது வெடி.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெகவில் அடுத்தடுத்து வெடிக்கும் லஞ்சப் புகார்!.. “ரூ. 5 லட்சம் கேட்டார் மாவட்டச் செயலாளர்”.. ஞானசௌந்தரி வைத்த புது வெடி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, அக்கட்சியின் அமைச்சர் N. ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். தவெக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், அரசு வழக்கறிஞர் பதவிக்காகத் தன்னிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் கேட்ட தொகையைக் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, மாற்றுக் கட்சியினரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவிகளை மோகன்ராஜ் வழங்கியதாக ஞானசௌந்தரி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கட்சிக்குள்ளேயே லஞ்சப் புகார்கள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது தவெக வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in